'பீஸ்ட்' முதல் நாள் வசூல் நிலவரம்.. வலிமையை முந்தியதா?

'பீஸ்ட்' முதல் நாள் வசூல் நிலவரம்.. வலிமையை முந்தியதா?

Update: 2022-04-14 20:30 GMT

பீஸ்ட் திரைப்படம் வெளிவந்த முதல் நாளில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் நேற்று வெளியானது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.  இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

நேற்று காலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் கட்அவுட் வைத்து மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்து மேளம் அடித்து கொண்டாடி வருகின்றனர். கலவையான விமர்சங்களை பெற்றிருந்தாலும்  ரசிகர்கள் ஆராவார்ம் செய்து வருகின்றனர். பீஸ்ட் படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, பீஸ்ட் திரைப்படம் சென்னையில் மட்டுமே சுமார் ரூ. 1.96 கோடி வரை முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன்முலம், இதற்குமுன் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது.

மேலும், மீண்டும் ஒருமுறை பாக்ஸ் ஆபிசில், தான் கிங் என்று நிரூபித்துள்ளார் நடிகர் விஜய்.  அதேபோல், கேரளாவில் முதல் நாள் வசூல் மட்டுமே ரூ. 6 கோடி வந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. பீஸ்ட் அமெரிக்காவில் வெளியாகி 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது, என இத்தகவல்களை படக்குழு தரப்பில் தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in


 

Similar News