‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு தடை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..!

‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு தடை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..!

Update: 2022-04-05 12:16 GMT

இந்தியாவில் தயாராகும் திரைப்படங்கள் வெளிநாடுகளில் வெளியாகும்போது, அந்தந்த நாட்டு தணிக்கைக்கு உட்பட்டே வெளியாகும். அதிலும், அரபு நாடுகளை பொறுத்தவரை தணிக்கைகள் மிக கடுமையாக பின்பற்றப்படும்.

தீவிரவாத காட்சிகள், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டும் திரைப்படங்களை அரபு நாடுகள் அனுமதிப்பதில்லை. அதேபோல், அரபு நாடுகளில் தீவிரவாதிகள் மறைந்து இருப்பது போன்ற காட்சிகள் கொண்ட படங்களையும் அந்த நாடு அனுமதிப்பதில்லை.

சமீபத்தில் வெளியான ‘குரூப்’ எனும்  மலையாள படத்தையும் குவைத் அரசு வெளியிட அனுமதி மறுத்தது. தமிழில் சமீபத்தில் வெளியான ‘எப்ஐஆர்’ திரைப்படத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

அந்த வகையில், விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தை குவைத்தில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெறும் தீவிரவாதிகள் குறித்த காட்சிகளுக்காகவும், வன்முறை காட்சிகளுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர், வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருந்த காரணத்திற்காக விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படமும் குவைத்தில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில், ‘பீஸ்ட்’ திரைப்படம் குவைத் நாட்டில் தடை செய்யப்பட்டு இருப்பதாக வந்த தகவல் அந்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Similar News