பீஸ்ட் படத்திற்கு வெளிநாடுகளில் தடை!!
பீஸ்ட் படத்திற்கு வெளிநாடுகளில் தடை!!
பீஸ்ட் படத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் கத்தார் மற்றும் குவைத் ஆகிய இடங்களில் வெளியிட தடை விதித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் வரும் 13ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் உலகளவில் மிக பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.
இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே நேரத்தில் பீஸ்ட் உடன் சேர்ந்து கே.ஜி.எஃப் 2-வும் ரிலீஸ் ஆவதால் இரண்டு படத்திற்கும் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் கத்தார் மற்றும் குவைத் ஆகிய இடங்களில் வெளியிட தடை விதித்துள்ளனர். தமிழகத்தில் கூட பீஸ்ட் படத்திற்கு தடை கோரி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
தீவிரவாதம் கதைக்களமாக இருப்பதால் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ படமும் தீவிரவாதம் கதைக்களமாக இருந்த காரணத்தால் இங்கு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in