அன்று பிச்சை… இன்று முதலாளி : சாதித்த பெண்!!
அன்று பிச்சை… இன்று முதலாளி : சாதித்த பெண்!!
அன்று பிச்சை எடுத்த பெண் ஒருவர் இன்று வாழ்க்கையில் சாதித்திருப்பது வாழ்க்கையில் பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் தனது பெற்றோர்களால் பாட்னா ரயில் நிலையம் அருகே அநாதையாக விடப்பட்ட ஜோதியை அங்கிருந்த பிச்சைக்கார தம்பதியினர் வளர்த்து வந்தனர். ஜோதி தன்னுடைய சிறு வயதில் இருந்தே, வளர்ப்பு பெற்றோர்களைப் போல, பிச்சை எடுத்து வந்துள்ளார்.
சூழ்நிலையை மாற்ற நினைத்த ஜோதி கல்வி கற்று முன்னேற வேண்டும் என முடிவு செய்தார். பாட்னா மாவட்ட நிர்வாகம் மற்றும் அறக்கட்டளை ஒன்றின் உதவியுடன் ஜோதிக்கு படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் உதவியுடன், மெட்ரிக்குலேஷன் தேர்வில், ஜோதி வெற்றி பெற்றுள்ளார்.
கல்வியின் உதவியுடன், 19 வயதே ஆகும் ஜோதிக்கு, ஒரு நிறுவனத்தின் கஃபேவை நடத்தும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. பகலில் கஃபேவை நடத்தும் ஜோதி, மற்ற நேரங்களில், கல்வியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
முன்பு பாட்னா ரெயில் நிலையங்களில், பிச்சை எடுத்து வந்த ஜோதி, இன்று தனது கல்வியில் வெற்றி பெற்று, கஃபே ஒன்றையும் நடத்தி வருகிறார். பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என ஆர்வத்துடன் இருக்கும் ஜோதி, பலருக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
newstm.in