தங்கக் கடத்தல்- பிக் பாஸ் அக்‌ஷராவிடம் அமலாக்கத்துறை பல மணிநேரம் விசாரணை

தங்கக் கடத்தல்- பிக் பாஸ் அக்‌ஷராவிடம் அமலாக்கத்துறை பல மணிநேரம் விசாரணை

Update: 2022-02-05 07:02 GMT

பிக்பாஸ் பிரபலம் அக்‌ஷரா ரெட்டியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி-யில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் - 5 ஆவது சீசனில் கலந்துக் கொண்ட பிரபலங்களில் ஒருவர் அக்‌ஷரா ரெட்டி. இறுதிவரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 84ஆவது நாளில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். எனினும் அவர் ரசிகர்களைக் கவர்ந்தார். பின்னர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியிலும் கலந்துக் கொண்டார்.

இந்த நிலையில் தங்கக் கடத்தல் வழக்கில் அக்‌ஷரா ரெட்டியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது அவரது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த தங்கக் கடத்தல் வழக்கு அம்மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அக்‌ஷராவை அமலாக்க துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியானது. கோழிக்கோடு அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து, அக்‌ஷராவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் விசாரணையின் முடிவு தெரியவில்லை.

இதனிடையே, அக்‌ஷராவின் உண்மையான பெயர் ஷ்ரவ்யா சுதாகர் என்றும், தங்கக் கடத்தல் வழக்கு கேரளாவை உலுக்கியபோது அவர் மாடலிங்கில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் அவருக்கு நேரடியாக தொடர்ப்பு இல்லை. அக்‌ஷராவின் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தங்கக் கடத்தலில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டு அக்‌ஷராவும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார்.

இப்படி ஒருபக்கம் நடந்தாலும், மறுபக்கத்தில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய அக்‌ஷரா, சக ஹவுஸ்மேட் வருணுடன் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
newstm.in

Similar News