முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு.. மிரட்டிய இளைஞர் கைது..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு.. மிரட்டிய இளைஞர் கைது..!

Update: 2022-05-19 13:11 GMT

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ‘சென்னை விமான நிலையம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர். பின்னர் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில், அந்த அழைப்பு போலியானது என தெரியவந்தது.

இதையடுத்து, அலைபேசியில் வந்த எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது நெல்லை மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமரைக் கண்ணன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து தாமரைக் கண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் கஞ்சா போதையில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டதும், வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. பின்னர் சென்னை தேனாம்பேட்டை போலீசார் தாமரைக் கண்ணனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News