அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி.. மத்திய அரசு திடீர் முடிவு !!
அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி.. மத்திய அரசு திடீர் முடிவு !!
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதில் இருந்து மீண்டு வந்தப்போதும், உலக நாடுகள் சிலவற்றில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு தொடங்கி உள்ளது. மேலும் சர்வதேச நாடுகளுக்கு செல்லும் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அனைவருக்கும் பூஸ்டர் செலுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
அதாவது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில், தற்போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
முன்னதாக, நாட்டில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள், 60 வயது மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதற்கு தகுதியானர்கள் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகின்றது. வெளிநாடு செல்வோருக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி திட்டம் உதவும் என்றும் மத்திய அரசு கருதுகிறது.
கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டு 9 மாதங்கள் முதல் 39 வாரங்கள் இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம். தற்போது 12 - 14 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in