பூஸ்டர் டோஸ் தடுப்பூசி விலை அதிரடியாக குறைப்பு!!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி விலை அதிரடியாக குறைப்பு!!

Update: 2022-04-09 20:45 GMT

தனியார் மருத்துவமனைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசியின் விலை ரூ.1200இல் இருந்து ரூ.225 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் உருமாறிய கொரோனா தொற்றுகள் பரவி வருவதால் 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திகொள்ள அனுமதி வழங்கப்பட்டதுதற்போது,  18 வயது கடந்தவர்களுக்கான  கொரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு  அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி,  18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பட்சத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம். இது ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நடைமுறையில் வரவுள்ளது.

தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை  தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ளலாம்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசியின் விலையை பாரத் பயோடெக் நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது. COVAXIN விலை ஒரு டோஸுக்கு ரூ.1200இல் இருந்து ரூ.225 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையும் ரூ.600ல் இருந்து ரூ.225 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News