#BIG NEWS:- வரும் 10ம் தேதி முதல் இவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி.. மத்திய அரசு அனுமதி..!

#BIG NEWS:- வரும் 10ம் தேதி முதல் இவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி.. மத்திய அரசு அனுமதி..!

Update: 2022-04-08 16:04 GMT

இந்தியாவில், கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அத்துடன், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் வரும் 10-ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தனியார் மையங்களில் முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு தற்போது அரசு தடுப்பூசி மையங்களில் போடப்பட்டு வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News