பவுலிங், பேட்டிங்கில் பந்தாடிய இந்திய அணி... இங்கிலாந்து கோட்டையில் விழுந்த ஓட்டை

பவுலிங், பேட்டிங்கில் பந்தாடிய இந்திய அணி... இங்கிலாந்து கோட்டையில் விழுந்த ஓட்டை;

Update: 2022-07-13 07:13 GMT

டாஸ் வென்ற ரோஹித் சர்மா சரியாக பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களை பந்தாடினார் பும்ரா. கிரீன் டாப் டெஸ்ட் பிட்சில் பும்ரா பந்து வீச்சில் ஆகச்சிறந்த பந்து வீச்சாக 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்னார். மேலும் ஷமி 3 விக்கெட், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் என்று இங்கிலாந்து 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்குச் சுருண்டது.

பிறகு ஆடிய இந்திய அணிக்கு ஏதோ ஷார்ட் பிட்ச் பவுலிங் என்றால் பலவீனம் என்று நினைத்து அதுவும் ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் பவுலிங்காக வீசி சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டது இங்கிலாந்து, ரோஹித் சர்மா 58 பந்துகளில் 5 சிக்சர்கள் 7 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் நாட் அவுட், ஷிகர் தவான் சிறிது காலமாக தரமான பந்து வீச்சை தரமான பிட்சில் எதிர்கொள்ளா விட்டாலும் தன் பங்குக்கு பொறுமையாக் ஆடி 54 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 18.4 ஓவர்களில் 114 ரன்கள் நோ லாஸ் என்று இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.


உண்மையில் டாஸ் வென்றால் இந்தியா பேட்டிங்தான் எடுக்கும் என்ற தவறான கணிப்பில் கிரீன் டாப் விக்கெட்டைப் போட்டனர், ஆனால் ரோஹித் சர்மா மிகச்சாமர்த்தியமாக பீல்டிங்கைத் தேர்வு செய்தார். Bazball-ஆ அல்லது பும்ரா பாலா என்ற ஆர்வம் மேலிட்டது. 2வது ஓவரில் ஜேசன் ராய் பும்ரா பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொண்டார். பந்துகள் எழும்பி பயங்கரமாக ஸ்விங் ஆகின. அடுத்ததாக ஜோ ரூட் கூடுதல் பவுன்சில் பண்ட்டிடம் பூபோல் எட்ஜ் செய்து கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.

பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டனும் டக் அவுட் ஆனார். இங்கிலாந்து 26/5. மொயீன் அலி (14), பட்லர் (30) இணைந்து ஸ்கோரை 53 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், ஆனால் மொயீன் அலியை அழகாக செட் அப் செய்து எடுத்தார் பிரசித் கிருஷ்ணா ஷார்ட் பிட்ச் ஆக வீசி விட்டு ஒரு ஃபுல் லெந்த் வீச அவரிடமே மொயின் அலி கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜாஸ் பட்லர் 30 ரன்களில் ஷமி பவுன்சரை புல் ஷாட் ஆடி டாப் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

கடைசியில் டேவிட் வில்லே, பிரைடன் கார்ஸ் முறையே 21 மற்றும் 15 ரன்களை எடுக்க கிரெய்க் ஓவர்டன் 8 ரன்களை எடுக்க டாப்லி ஒரு சிக்சருடன் 6 ரன்களை எடுக்க இங்கிலாந்து 25.2 ஓவர்களில் 110 ஆல் அவுட். ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் பவுலிங் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட இங்கிலாந்து .

ஷிகர் தவான் இருமுறை ரன் அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து தப்பினார், ஆனால் இன்னொரு முனையில் ரோஹித் சர்மா 58 பந்துகளில் 76 ரன்கள் விளாசித்தள்ளினார் ரோஹித் சர்மா. ஷிகர் தவான் கடைசி வெற்றி பவுண்டரியாக அருமையான லாஃப்டட் ஸ்கொயர் கட் அடித்து வெற்றி பெறச் செய்தார்.

 

இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது. இந்த வெற்றியை குறிப்பிட்டு பல்வேறு இங்கிலாந்து ஊடகங்கள் இந்திய அணி குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். தற்போது அதற்கு அடியாக நேற்றிரவு ஓவலில் முதல் ஒருநாள் போட்டியில் 110 ரன்களுக்குச் சுருண்டது,

newstm

Tags:    

Similar News