சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் அதிரடி கைது !
சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் அதிரடி கைது !
மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு சிறுவனுக்கு, ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக அளிக்கப்பட்ட புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை அவ்வப்போது அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பின்னர் மிரட்டியதாகவும் பெயிண்டர் மீது புகார் கூறப்படுகிறது.
இதனை அறிந்த சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் அளித்த புகாரில், நான் தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தேன். நாங்கள் வசிக்கும் அதே பகுதியில் குடியிருந்து வரும் பெயிண்டர் திடீரென என்னை வீட்டுக்குள் தூக்கி சென்றார். நான் சத்தம் போட்டேன். ஆனால், வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டு எனக்கு உடல் ரீதியாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
எனவே நான் கதறி அழுது கூச்சல் போட்டேன். இதன் காரணமாக அந்த நபர் தப்பிச் சென்று விட்டார் என்று போலீசாரிடம் தெரிவித்தார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் பாதிக்கப்பட்ட 6ஆம் வகுப்பு சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அருண்குமார் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
newstm.in