காதலனின் திருமணத்தில் காதலிக்கு அடி, உதை!!
காதலனின் திருமணத்தில் காதலிக்கு அடி, உதை!!
ஏழு ஆண்டுகளாக காதலித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்யவிருந்த காதலனை தடுக்க சென்ற காதலி கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மெஹ்பூபாபாத் மாவட்டம் கம்மம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவரும், ரஜனி என்ற பெண்ணும் 2015ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இந்நிலையில் ரஜனியை திருமணம் செய்வதாகச் சொல்லிவிட்டு ஸ்ரீநாத் வேறொரு பெண்ணை மணமுடிக்க இருந்தார்.
இது குறித்து அறிந்த ரஜனி, கல்யாணத்தை நிறுத்த முடிவு செய்தார். கம்மம் பகுதியில் உள்ள மண்டபத்தில் ஸ்ரீநாத்துக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அங்கு சென்ற காதலி ரஜனி ஸ்ரீநாத்திடம் நியாயம் கேட்டிருக்கிறார். மண்டபத்துக்கு வருவதற்கு முன்பு போலீஸிடம் புகாரளித்து அவர்களையும் கையோடு அழைத்தும் வந்திருக்கிறார்.
ஆனால் ஸ்ரீநாத்தின் உறவுக்கார பெண்கள் ரஜனியை தாக்கி அவரது தலைமுடியை பிடித்து இழுத்து மண்டபத்துக்கு வெளியே விரட்டி காலணிகளாலும் அடித்து துன்புறுத்தினர். இந்த சம்பவங்கள் அனைத்தும் போலீஸார், பொதுமக்கள் உட்பட பலரது கண் முன்னே நடந்தும் எவரும் தடுக்காமலும், கேள்வி ஏதும் எழுப்பாமலேயே இருந்தனர். இதனையடுத்து ஸ்ரீநாத் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணமுடித்தார்.
ரஜனி தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in