மாமியாரின் கள்ளக்காதலுக்கு மருமகள் தடை! கொடூரனாக மாறிய கள்ளக்காதலன்!!
மாமியாரின் கள்ளக்காதலுக்கு மருமகள் தடை! கொடூரனாக மாறிய கள்ளக்காதலன்!!
கள்ளக்காதலில் இருந்த மாமியாரின் செயலை கண்டித்து கேள்வி கேட்ட மருமகளை, மாமியாரின் காதலன் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாவூரைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பலப்பள்ளி முழிக்குளம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
பொறியியல் படித்து வந்த வைஷ்ணவி, திருமணமான பிறகு மாமியார் வீட்டில் இருந்தபடியே கல்லூரிக்கு போய் வந்தார். இந்நிலையில் மாமியார் குமாரிக்கும், அதேப்பகுதியைச் சேர்ந்த சுதீஷ் என்பவருக்கும் காதல் உறவு இருப்பது வைஷ்ணவிக்கு தெரியவந்தது.
மருமகள் வீட்டில் இருக்கும் போதே தனது காதலனை வீட்டுக்கு அழைத்து வருவதை மாமியார் வாடிக்கையாக வைத்திருந்தார். இதனையடுத்து வைஷ்ணவி மாமியாரிடம் சண்டை போட்டுள்ளார். அதனால் காதலன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் வைஷ்ணவியை மாமியார் அறையில் வைத்து பூட்டியிருக்கிறார்.
அண்மையில் வீட்டுக்கு வந்த மாமியாரின் காதலனை வழிமறித்த வைஷ்ணவி, உள்ளே வரக்கூடாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வைஷ்ணவியின் முகத்திலேயே பலமாக குத்தினார்.
இதனால் வைஷ்ணவி நிலைக்குலைந்துப் போனார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். வைஷ்ணவியின் கணவர் முகேஷும் நடந்த கொடூரம் குறித்து போலீஸிடம் புகார் அளித்துள்ளார்.
newstm.in