செல்போனில் மூழ்கியிருந்த தங்கை… அண்ணன் திட்டியதால் தற்கொலை!!

செல்போனில் மூழ்கியிருந்த தங்கை… அண்ணன் திட்டியதால் தற்கொலை!!

Update: 2022-05-21 09:45 GMT

செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளும்படி அண்ணன் கூறியதால் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டும்பிலி பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை பெண்ணின் பெற்றோரும், சகோதரனும்  கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் உணவு அருந்திக் கொண்டிருந்த போது அப்பெண் மீண்டும் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்ததால் பெண்ணின் சகோதரன் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனால் மன உளைச்சலில் இருந்த அப்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  சகோதரன் வீட்டிற்கு வந்த போது தங்கையின் அறை பூட்டி இருந்தது. சந்தேகமடைந்த சகோதரன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது தங்கை அறையில் உள்ள பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News