அண்ணனை உயிரோடு குழி தோண்டி புதைத்த தம்பி!!

அண்ணனை உயிரோடு குழி தோண்டி புதைத்த தம்பி!!

Update: 2022-03-26 20:04 GMT

குடித்துவிட்டு தகராறு செய்த அண்ணனை அவரது தம்பி உயிரோடு புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த பாபு என்ற  இளைஞர் மதுவுக்கு அடிமையானதால் குடும்பத்தில்  அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பாபு சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

அப்போது மீண்டும் குடும்பத்தில் சண்டை நடந்தது. இந்நிலையில் பாபு திடீரென மாயமானார். தனது அண்ணனை காணவில்லை என அவரது தம்பி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். பாபு மாயமானதில் அவரது தம்பி மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அண்ணன் பாபு குடித்துவிட்டு தினமும் தகராறு செய்து வந்ததால் அவரை கொலை செய்ய தம்பி சாபு திட்டமிட்டு வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று குடித்துவிட்டு தகராறு செய்த அண்ணனை தாக்கியுள்ளார்.

இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சாபு, உடலை இழுத்துச் சென்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் குழி தோண்டி உயிரோடு புதைத்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் பாபுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அண்ணனைக் கொலை செய்த தம்பி சாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Similar News