சுட்டெரிக்கும் வெப்பம்.. 6 மாவட்டங்களில் சதமடித்த வெயில் !!

சுட்டெரிக்கும் வெப்பம்.. 6 மாவட்டங்களில் சதமடித்த வெயில் !!

Update: 2022-03-20 07:00 GMT

கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போதே வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக அனல்காற்றும் வீசி வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். நாள்தோறும் காலை முதலே அதிகப்படியான வெப்பத்தால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

தற்போதே கடுமையான வெப்பம் நிலவி வருவதால் பல மாவட்டங்களில் வெயில் ஃபாரன்ஹீட் டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 6 மாவட்டங்களில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை, கரூர், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. அதிபட்சமாக கரூர் மாவட்டத்தில் 40.0 செல்சியஸ் (104 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவாகி உள்ளது.

இதனிடையே, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

newstm.in

Similar News