வாட்டும் வெப்பம்.. தமிழகத்தில் 9 இடங்களில் சதமடித்த வெயில் !!
வாட்டும் வெப்பம்.. தமிழகத்தில் 9 இடங்களில் சதமடித்த வெயில் !!
கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போதே வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. காலை முதலே அதிகப்படியான வெப்பத்தால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் சாலையோரங்களில் இருக்கும் இளநீர், தர்பூசணி, குளிர்பாணங்கள் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக பெண்கள் தங்கள் முகம், கைகளை துணியால் மூடியப்படி பயணிக்கின்றனர். இவ்வாறு ஒருபக்கம் வெயில் கொளுத்தினாலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிர்ச்சியான சூழல் மாலை நேரங்களில் நிலவுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 9 மாவட்டங்களில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. திருச்சி 105.98, கரூர் பரமத்தி 104.9, மதுரை விமான நிலையம் 104.36, நாமக்கல் மற்றும் சேலம் 104, மதுரை 101.48, திருத்தணி அதிராம்பட்டினம் 101.12, தருமபுரி 100.76 ஆகிய இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியிருக்கிறது
Newstm.in