சுட்டெரிக்கும் வெயில்: நான்கு இடங்களில் 100 டிகிரியைக் கடந்த வெப்பம் !!
சுட்டெரிக்கும் வெயில்: நான்கு இடங்களில் 100 டிகிரியைக் கடந்த வெப்பம் !!
கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போதே வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. காலை முதலே அதிகப்படியான வெப்பத்தால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் சாலையோரங்களில் இருக்கும் இளநீர், தர்பூசணி, குளிர்பாணங்கள் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக பெண்கள் தங்கள் முகம், கைகளை துணியால் மூடியப்படி பயணிக்கின்றனர். இவ்வாறு ஒருபக்கம் வெயில் கொளுத்தினாலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிர்ச்சியான சூழல் மாலை நேரங்களில் நிலவுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 4 மாவட்டங்களில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. அதிபட்சமாக கரூர் மாவட்டத்தில் 40 டிகிரி செல்சியஸ் (104 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவாகி உள்ளது.
இதேபோல், வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என கருதப்பபடுகிறது.
newstm.in