பஸ் கட்டணம் உயர்வு.. அனுமதி வழங்கியது அரசு..!

பஸ் கட்டணம் உயர்வு.. அனுமதி வழங்கியது அரசு..!

Update: 2022-03-31 10:30 GMT

கேரளாவில், அரசு பஸ்களுக்கு இணையாக தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் - டீசல் விலை உயர்வை தொடர்ந்து தனியார் பஸ்களின் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.12 ஆக உயர்த்த வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பாக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஆன்டனி ராஜிடமும் மனு கொடுத்தனர். ஆனால், பஸ் உரிமையாளர்களின் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, கேரளா முழுவதும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, “கேரள அரசு விரைவில் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை உயர்த்தும்” என்று முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்ததை அடுத்து, தனியார் பேருந்து உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த 27-ம் தேதி வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், கேரள தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 8 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தவும், அதற்கடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு வசூலிக்கப்படும் 90 பைசாவை ஒரு ரூபாயாக உயர்த்தவும் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

அரசின் இந்த முடிவால், தனியார் பஸ் உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வு பரிந்துரை மிக குறைவாக உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News