இலங்கையில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் நாடே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய ஆசிரியர்களும், மருத்துவ ஊழியர்களும் அரசு மீதான கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பேருந்து கட்டணம் 22 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாக இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

Tags: