பறவையை காப்பாற்ற முயன்ற தொழிலதிபர் கார் மோதி உயிரிழப்பு!!

பறவையை காப்பாற்ற முயன்ற தொழிலதிபர் கார் மோதி உயிரிழப்பு!!

Update: 2022-06-12 08:52 GMT

சாலையில் பறவையை காப்பாற்ற முயன்றி தொழிலதிபர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் அமர்ஜெரிவாலா என்ற நபர் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவரது காரின் மீது எதிர்பாராதவிதமாக பறவை ஒன்று மோதியது. இதனால், பதறிப்போன அவர், காரில் இருந்து கீழே இறங்கினார்.

 உடனடியாக அவரது ஓட்டுநரும் காரை விட்டு கீழே இறங்கிய நிலையில், ஜெரிவாலா, அடிபட்ட பறவையை தன் கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த டாக்சி ஒன்று அவர்களை இடித்துச்சென்றது.

இந்த விபத்தில் ஜெரிவாலா உயிரிழந்தார். அவரது ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். ஜெரிவாலாவின் தந்தை மனிஷ், ஓட்டுநர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என தெரிவித்தபோதும், முதல் தகவல் அறிக்கையை திரும்ப பெற போலீஸ் தரப்பு மறுத்துவிட்டது.

பறவையின் உயிரை காப்பாற்ற முயன்ற கருணை உள்ளம் கொண்ட நபரின் உயிர் விபத்தில் பறிபோனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

Similar News