பள்ளியை பார்வையிட வாங்க.. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!
பள்ளியை பார்வையிட வாங்க.. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!
மூன்று நாள் பயணமாக தலைநகர் டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று பிற்பகல் 1 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் சந்தித்தார்.
இதன்போது, இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவி செய்ய அனுமதி வழங்க வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை, கச்சத்தீவு மீட்பது குறித்து கோரிக்கை விடுத்தார்.
இதன் பின்னர் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஆகியோரையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், டில்லியில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் மொஹல்லா கிளினிக்கை பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “டில்லியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிறப்பு பள்ளியை போன்று தமிழகத்திலும் கட்ட உள்ளோம்.
அந்த பள்ளியை அரவிந்த் கெஜ்ரிவால் கண்டிப்பாக பார்வையிட வர வேண்டும். இந்த கோரிக்கையை தமிழ்நாடு மக்கள் சார்பாக வைக்கிறேன்" என்றார்.