திமுகவினரிடம் காசு வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள்- எம்.ஆர்.விஜயபாஸ்கர்
திமுகவினரிடம் காசு வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள்- எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினர் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அதேபோல் திமுகவும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எம்.ஆர் விஜயபாஸ்கர் காந்தி கிராமம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது, 9 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழை சட்டசபைக்கும் தேர்தல் வர உள்ளது. எனவே இன்னும் 27 அமாவாசை மட்டுமே திமுக ஆட்சி இருக்கும். அதற்கு பிறகு திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். வெறும் 3 சதவீத வித்தியாசத்தில்தான் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது என்றார். இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் அதிமுக 200 இடங்களில் வெற்றிபெறும். பொய் சொல்லியே திமுக ஆட்சியைப் பிடித்தது, என்றார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்; ஆனால், பணத்தை வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள், என்று கூறி வாக்கு சேகரித்தார்.
newstm.in