வெளியானது சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!
வெளியானது சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (22-ம் தேதி) காலை வெளியான நிலையில், தற்போது 10-ம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள், https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பில் ஒட்டு மொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், மாணவர்கள் 91.25% பேர்; மாணவிகள் 93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை, ஒட்டுமொத்தமாக 98. 83 % தேர்ச்சி பெற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் 97.79% பேர் விகிதத்துடன் 3 வது இடத்தை பெற்றுள்ளது.