ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

Update: 2022-04-12 10:55 GMT

ஈரோடு நாடார்மேட்டை சேர்ந்த வர்ஷினி என்பவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் 4ஆம் தேதி வழக்கம்போல ஈரோடு நாடார்மேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து கல்லூரி பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து சாஸ்திரி நகர் பிரிவு வளைவில் சென்றுகொண்டிருந்தபோது முன்பக்க கதவு எதிர்பாராத விதமாக திறந்ததில் பேருந்தில் இருந்த மாணவி வர்ஷினி தவறி சாலையில் விழுந்தார்.

இதில் மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்நது பேருந்தில் இருந்த சக மாணவிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வர்ஷினியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மாணவிக்கு தீவிர சிசிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த விபத்து காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{background: red; border-radius: 50% / 16%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 68px; height: 45px;}.youtube_play:before{background: inherit; border-radius: 5% / 50%; bottom: 9%; content: ""; left: 0; position: absolute; right: 0; top: 9%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: ""; font-size: 15px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}

" data-style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" data-width="560">Full View

Similar News