முதல்வர் அதிரடி! விருதுநகர் கொடூர சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றம்!!
முதல்வர் அதிரடி! விருதுநகர் கொடூர சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றம்!!
விருதுநகரில் 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் ஜூனைத் அகமது ஆகிய இருவரும் திமுக இளைஞரணியில் பொறுப்பில் இருந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் அப்பகுதியில் உள்ள காட்டன் மில்லில் வேலை செய்து வருகிறார்.
ஹரிஹரனும் இளம்பெண்ணும் முகநுால் மூலம் நண்பர்களாகினர். பெண்ணைக் காதலிப்பது போல் நடித்து ஹரிஹரன் அவரது அந்தரங்கப் படங்களை வாங்கினார். பின்னர் அந்தப் படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக பதிவு செய்தார்.
ஹரிஹரன் அந்த வீடியோவை, தனது நண்பன் ஜுனைத் அகமதுவுக்கு அனுப்பினார். ஜுனைத் அந்த வீடியோவை தனது பகுதியைச் சேர்ந்த பிரவீண் என்பவருக்கு அனுப்ப அவர் மூலம் பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்கு வீடியோ அனுப்பப்பட்டது.
அவர்கள் அனைவரும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி இளம்பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். பாதிக்கப்பட்ட பெண் தான் பணியாற்றும் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராகப் பணிபுரியும் 37 வயதான மாடசாமியை அணுகி காப்பாற்றும்படி கோரினார்.
மாடசாமியோ அந்த வீடியோவைக் கேட்டு வாங்கிப் பார்த்து விட்டு அவரும் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் 8 நபர்களின் தொடர் கொடுமைகள் தாங்க இயலாத அந்தப் பெண், பாண்டியன் நகர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஹரிஹரன், ஜுனைத் அகமது, பிரவீண், மாடசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. அதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், விருதுநகர் பாலியல் பலாத்கார வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும்படி டிஜிபிக்கு உத்தரவிடப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், 60 நாட்களுக்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் சட்டரீதியில் கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் தெரிவித்தார்.
newstm.in