ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ள சிஎஸ்கே வீரர்..!!
ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ள சிஎஸ்கே வீரர்..!!
ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,15 வருட ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து இல்லை, ஆனால் இந்த முறை சென்னை அணி தொடர்ச்சியாக நான்கு போட்டியிலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.
சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு சரியான பந்துவீச்சாளர்கள் இல்லாததே முக்கியமான காரணமாகவே பார்க்கபப்டுவதால், காயத்தில் இருந்து தீபக் சாஹர் குணமடைந்து வந்துவிட்டால் அனைத்து பிரச்சனைகளையும் சரியாகிவிடும் என ரசிகர்கள் கடைசி நம்பிக்கையுடன் காத்திருந்த நிலையில், சென்னை ரசிகர்களின் கடைசி நம்பிக்கையும் பொய்த்துப்போகக்கூடிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாத தீபக் சாஹர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.