ஜூன் 27ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!!

ஜூன் 27ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!!

Update: 2022-06-21 10:20 GMT

ஜூன் 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற உள்ள கூட்டத்தில் பல்வேறு முக்கிய முதலீடுகள் தொடர்பாக புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான கமிட்டி விரைவில் அரசிடம் அறிக்கை கொடுக்க உள்ளது. அதன் அடிப்படையில் புதிய சட்ட மசோதா ஏற்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது 3 மாதங்களுக்கு பிறகு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

newstm.in

Similar News