பல அடி உயரத்தில் நின்ற கேபிள் கார்! பீதியில் உறைந்த மக்கள்!!
பல அடி உயரத்தில் நின்ற கேபிள் கார்! பீதியில் உறைந்த மக்கள்!!
இமாசலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான பர்வானூவில் உள்ள டிம்பர் டிரெயில் பகுதியில் கேபிள் கார் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், 2 முதியவர்கள், 4 பெண்கள் உள்பட மொத்தம் 11 சுற்றுலாவாசிகள் சென்ற கேபிள் கார் திடீரென பல நூறு அடி உயரத்தில் நடுவழியில் நின்றது. கேபிள் காரில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் நடுவழியில் நின்று விட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்த நிலையில், கயிறு கட்டி கேபிள் காரில் இருந்து ஒவ்வொருவராக கீழே இறக்கி கொண்டு வரப்பட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சுற்றுலாவாசிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர் என பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. சுற்றுலாவாசிகள் சிக்கி கொண்ட தகவல் தெரிந்ததும், இந்திய விமான படையும் உடனடியாக மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டது.
ஆனால் அதற்கு தேவை ஏற்படாமல் மக்கள் அனைவரும் கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
newstm.in