ஆரம்பிக்கலாமா..? விரைவில் ஓடிடியில் வெளியாகிறது விக்ரம்..!!
ஆரம்பிக்கலாமா..? விரைவில் ஓடிடியில் வெளியாகிறது விக்ரம்..!!;
லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி, கமல்ஹாசன்-விஜய் சேதுபதி-ஃபஹத் பாசில்-சூர்யா நடித்துள்ள “விக்ரம்” திரைப்படம் ஜூன் 3, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படத்தின் பிரமாண்ட விளம்பரங்கள், நட்சத்திர கூட்டம், என ‘விக்ரம்’ படத்தின் ஒவ்வொரு அம்சமும் திரையுலக ரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது. முதல் டீசரில் கமல்ஹாசன் உச்சரித்த ‘ஆரம்பிக்கலாமா’ என்ற ஒற்றை வார்த்தையில் இருந்து, டிரெய்லரில் வரும் ‘பாத்துக்கலாம்’ வரை ஒவ்வொரு பஞ்ச் வசனங்களும் ரசிகர்களின் கொண்டாட்ட ஆரவாரமாக அமைந்தது.
இப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
திரைத்துறையின் உச்சபட்ச ஆக்ஷன் த்ரில்லர்”, “ஆண்டவரின் வெற்றி மேஜிக்”, “தென்னிந்தியாவின் பவர் ஹவுஸ் திறமைகளின் நடிப்பு கண்காட்சி”, “ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் திரைப்படம்’ இன்னும் இன்னும் பல பாராட்டுக்கள்!!! கமல்ஹாசனின் திரை வாழ்வில் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றிப்படமான ‘விக்ரம்’ படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும் மற்றும் விமர்சகர்களின் பாரட்டுக்களும் நிற்காமல் இன்னும் கனமழை போல, பொழிந்து கொண்டு இருக்கிறது. இந்திய அளவில் அனைத்து திரைச் சாதனைகளையும் உடைத்துள்ளன.இந்த படம் இந்திய திரையுலகின் பல பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் சாதனைகளை முறியடித்துள்ளது, மேலும் தமிழ்நாட்டின் டாப் வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது.
இந்நிலையில், திரையரங்குகள் இன்னும் மக்கள் திரளில் திளைத்திருக்கும் நிலையில், இத்திரைப்படம், ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
நாயகன் மீண்டும் வரார்.. 🔥😎 #Vikram Streaming from July 8 on #DisneyplusHotstar #VikramOnDisneyplusHotstar @ikamalhaasan @Dir_Lokesh @anirudhofficial @VijaySethuOffl #FahadhFaasil @Suriya_offl @Udhaystalin #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/QUey20zavP
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) June 29, 2022