ஆள்சேர்ப்பு அறிவிப்பாணைகள் ரத்து.. தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..!
ஆள்சேர்ப்பு அறிவிப்பாணைகள் ரத்து.. தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..!
மின்வாரிய ஆள்சேர்ப்பு அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார மின் வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் கொரோனா தொற்று மற்றும் சட்டமன்றத் தேர்தல் காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில், அனைத்து அரசு நிறுவனங்களின் ஆள்சேர்ப்பையும் டி.என்.பி.எஸ்.சி. மேற்கொள்ளும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதால், மின்வாரிய ஆள்சேர்ப்பு அறிவிப்பாணைகள் ரத்து செய்யப்படுகிறது.
கணினி வழி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கு கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.