“இனியும் காத்திருக்க முடியாது” – இந்திய மாணவர்கள் வீடியோ!!

“இனியும் காத்திருக்க முடியாது” – இந்திய மாணவர்கள் வீடியோ!!

Update: 2022-03-06 09:06 GMT

உக்ரைனில் உள்ள சுமி நகரில் இருந்து வீடியோ வெளியிட்ட இந்திய மாணவர்கள், இனியும் காத்திருக்க முடியாது, நாங்கள் எல்லை நோக்கி செல்கிறோம் என்று கூறிய நிலையில், அவர்களை அங்கேயே இருக்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

உக்ரைன்ரஷ்யா போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் இருதரப்புக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அதேபோல் இந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். மேலும் கீவ் நகரத்தில் இருந்து தப்பிச் செல்லும்போது ஹர்ஜோத் சிங் என்ற மாணவருக்கு குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்நிலையில் உக்ரைன் சுமி பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், 'எங்களுக்குப் பயமாக உள்ளது. நாங்கள் நிறையக் காத்திருந்துவிட்டோம். இனி காத்திருக்க முடியாது என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.


எங்களின் உயிரைப் பணயம் வைத்து நாங்கள் எல்லையை நோக்கி நகர்கிறோம். எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அனைத்து பொறுப்பும் இந்தியத் தூதரகத்தையே சேரும்' என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை எல்லை பகுதிக்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

எல்லை பகுதிக்கு நடந்து சென்று பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், இருக்கும் இடத்திலேயே பத்திரமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

newstm.in

Similar News