'வானத்தை போல' சீரியல் இயக்குனர் சென்ற கார் விபத்து..!!
'வானத்தை போல' சீரியல் இயக்குனர் சென்ற கார் விபத்து..!!
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (67). பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் உறவினரான இவர், 'டிவி'யில் ஒளிபரப்பாகும் 'வானத்தை போல' சீரியல் இயக்குனர் ஆவார்.
நேற்று காலை இவர், மாருதி சுசுகி காரில் மனைவி செல்வி (56), உதவியாளர் ரகுபதி (49) ஆகியோருடன் தேனிக்கு புறப்பட்டார். காரை, ரகுபதி ஓட்டினார்.
காலை 10 மணியளவில் கார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் கல்லூரி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மூன்று பேரும் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.