சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர்!!
சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர்!!
லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் அசோக், அவரது மகன் பாலமுருகன். இவர் காரில் முசிறியில் உள்ள தனது நண்பரை சந்தித்து விட்டு மீண்டும் லால்குடி செல்ல திருச்சி செல்வதற்காக குளித்தலை டோல்கேட் வழியாக திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தார்.
புறவழி சாலையில் நாப்பாளையம் கழிப்பிடம் அருகே வந்தபோது இண்டிகோ கார் இன்ஜின் திடீரென தீப்பிடித்து. உடனே பாலமுருகன் காரை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீயை அணைத்தனர். இதில் இண்டிகோ கார் முற்றிலுமாக எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது.