சென்னையில் மட்டும் இத்தனை பேர் மீது வழக்கு..!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!
சென்னையில் மட்டும் இத்தனை பேர் மீது வழக்கு..!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!
விபத்துகளை கட்டுப்படுத்தவும், குறைக்கவும், மே 23-ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் இருக்கும் நபரும் ஹெல்மெட் விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, கடந்த மாதம் 23-ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்து, விதியை மீறுபவர்களின் மீது கட்டண நடவடிக்கை பாய்ந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகரில் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக கடந்த 12 நாட்களில் 21 ஆயிரத்து 984 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த 18 ஆயிரத்து 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக கடந்த 11 நாட்களில் 21 லட்சத்து 98 ஆயிரத்து 400 ரூபாயை வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் கடந்த 12 நாட்களில் 18 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.