குத்தாட்ட ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி..!
குத்தாட்ட ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி..!
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கிராமங்களில் உள்ள கோவில்களில் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த விழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவதால் ஒருசில இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாலும், கொரோனா தொற்றை கருத்தில் கொண்டும், ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த காவல்துறையினர் அனுமதிப்பதில்லை.
இந்நிலையில், கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக்கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ரமேஷ், “ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை இரவு 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்; ஆபாசமான வார்த்தைகளும், நடனங்களும் இருக்கக்கூடாது.
கொரோனா தொற்று காலம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்” என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.