சுற்றுலாப் பயணிகளுக்கு கொண்டாட்டம்.. மலர் கண்காட்சி மே 24ல் தொடக்கம் !!
சுற்றுலாப் பயணிகளுக்கு கொண்டாட்டம்.. மலர் கண்காட்சி மே 24ல் தொடக்கம் !!
கொடைக்கானலில் 59ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 24ஆம் தேதி தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. அங்கு பிரதானமான மலர் கண்காட்சி தொடங்க உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாகன் கூறியதாவது, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் மே 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பத்து நாள்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
அதேபோல், சுற்றுலாத்துறை சார்பில் மே 24 முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை கோடை விழா நடைபெறுகிறது. இதனையொட்டி பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், படகு அலங்கார போட்டி, மீன்பிடி போட்டி, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
கோடை விழாவில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
newstm.in