ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து தமிழுக்கு ஆதரவு தெரிவித்த பிரபலம்!!

ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து தமிழுக்கு ஆதரவு தெரிவித்த பிரபலம்!!

Update: 2022-04-13 06:00 GMT

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி தான் என்றார்.

இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும். இந்தியை, ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக கொண்டு வரும் தருணம் வந்து விட்டது என்று கூறினார்.

அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு அரசியல்வாதிகளும், திரைத்துறையினரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். இசைப்புயல் .ஆர்.ரஹ்மான், தனது சமூக வலைதளத்தில் தமிழன்னையின் ஓவியத்தைப் பகிர்ந்து தமிழணங்கு எனக் குறிப்பிட்டிருந்தார்.

ரஹ்மானின் பதிவு இந்திய அளவில் பேசு பொருளானது. பலரும் தமிழ் மொழிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஒன்று திரண்டனர். இதற்கிடையே சிம்பு தமிழால் ஒன்றிணைவோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


அவரைத் தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் தமிழால் இணைவோம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ் தொடர்பான பதிவுகள் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

newstm.in

Similar News