சிமென்ட் துறை ராஜா அதானி!!

சிமென்ட் துறை ராஜா அதானி!!

Update: 2022-05-17 08:19 GMT

ஹோல்சிம் நிறுவனத்தின் இந்தியா பிரிவான ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் கடும் போட்டிக்கு இடையே அதானி குழுமம் வாங்கியுள்ளது.

முன்னதாக 63.19% பங்குகளை விற்றுவிட்டு ஸ்விஸ் திரும்ப உள்ளதாக ஹோல்சிம் நிறுவனர் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பங்குகளை வாங்க அதானி குழுமம், பிர்லா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிட்டன.

இறுதியில் அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏசிசி நிறுவன பங்குகளை 1,050 கோடி டாலருக்கு, அதாவது ரூ.81,361 கோடிக்கு கவுதம் அதானி குழுமம் வாங்கியுள்ளது.

ஹோல்சிம் ஏஜி நிறுவனம் அம்புஜா சிமென்ட் நிறுவனத்தில் 63.19 சதவீத பங்குகளையும், ஏசிசி லிமிடெட் நிறுவனத்தில் 4.48 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. இதன் மூலம் சிமென்ட் உற்பத்தியில் இந்தியாவின் 2ஆவது பெரிய நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது.

முதலிடத்தில் பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் உள்ளது. கையகப்படுத்தல் அறிவிப்புக்குப் பிறகு அம்புஜா நிறுவனப் பங்கு விலை 2.9 சதவீதமும், ஏசிசி நிறுவனப் பங்கு விலை 6.4 சதவீதமும் உயர்ந்தன.

அதேபோல அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 2.75% உயர்ந்தது. அல்ட்ராடெக் சிமென்ட் பங்கு விலை 2.5 சதவீதமும், ஸ்ரீ சிமென்ட் பங்கு விலை 1.8 சதவீதமும் சரிந்தன.

newstm.in

Similar News