சட்டப்பேரவை நூற்றாண்டு விழா: சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா: சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

Update: 2022-05-11 05:30 GMT

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த விழாவிற்கான சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வு நேற்று சட்டமன்ற அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதனை, சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார்.

இந்த சிறப்பு மலரில் கடந்த 1922-ம் ஆண்டிலிருந்து 2022-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டபேரவையின் முக்கிய நிகழ்வுகள் குறித்த சிறப்பு படங்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா குறித்த நிகழ்வுகளின் படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த சிறப்பு மலர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News