ஐடிஐ முடித்தவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான கல்விச்சான்று..!
ஐடிஐ முடித்தவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான கல்விச்சான்று..!
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) படித்தவர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இணையான கல்விச்சான்றிதழ் வழங்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு பயிற்சித் துறை செயலர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஓராண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு 10-ம் வகுப்புக்கு இணையாகவும், 2 ஆண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையாகவும் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 8-ம் வகுப்பு படித்துவிட்டு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10-ம் வகுப்பு முடித்ததற்கு இணையான சான்றும், 10-ம் வகுப்பு முடித்து ஐடிஐ படித்தவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான சான்றும் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயர்கல்வி பயில மட்டுமே இணை சான்றிதழ் பயன்படும் என்றும், அரசு வேலைவாய்ப்புக்கு இணை சான்றிதழ் கருத்தில் கொள்ளப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்த நிலையில், தற்போது அரசாணை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.