தலைவரானார் ஆர்.கே. செல்வமணி.. தோல்வியை தழுவினார் பாக்கியராஜ்..!

தலைவரானார் ஆர்.கே. செல்வமணி.. தோல்வியை தழுவினார் பாக்கியராஜ்..!

Update: 2022-02-28 11:25 GMT

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் போட்டியிட்டனர். பாக்யராஜ் அணி சார்பில், பார்த்திபன் செயலாளர் பதவிக்கும், வெங்கட் பிரபு பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டனர்.


ஆர்.கே.செல்வமணி அணி சார்பில் ஆர்.வி.உதயகுமார் செயலாளர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு பேரரசும் போட்டியிட்டனர். இந்த அணியின் இணைச் செயலாளர் பதவிக்கு சுந்தர்.சி, முருகதாஸ், லிங்குசாமி ஆகியோர் போட்டியிட்டனர்.

பாக்யராஜ் அணியை சேர்ந்த மாதேஷ், எழில் ஆகியோர் துணைத் தலைவர்களாகப் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்ய, சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

பின்னர் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில், ஆர்.கே. செல்வமணி 955 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

Similar News