5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

Update: 2022-02-12 20:07 GMT

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

நாளை (13-02-2022) தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், நீலகிரி , கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும்ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வரும் 14ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் வேளாங்கண்ணியில் 11 செ.மீ. மழையும், நாகையில் 10 செ.மீ. மழையும், பரங்கிப்பேட்டையில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று அதில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

newstm.in

Similar News