தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி பகுதிகளிலும், கரூர், திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் 19ஆம் தேதி வரை மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்குப் பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. ஏற்கனவே கணிக்கப்பட்டபடி, ஒரு வாரம் முன்னதாகவே பருவமழை தொடங்கியுள்ளது. இதேபோல, கேரளாவில் 4 நாட்கள் முன்னதாக, வரும் 27ஆம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
newstm.in