அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு..!!

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு..!!

Update: 2022-02-21 04:30 GMT

கேரளா கடல்பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். இதுபோன்று 22-ம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 23-ம் தேதி திருப்பூர், நீலகிரி மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பிப்.24-ம் தேதி தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தளவில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் பனிமூட்டத்துடன் காணப்படும் என்பது குறிப்பிடப்படுகிறது.

Similar News