#BREAKING :- சென்னையில் பதற்றம்.. விரைவில் ஓபிஎஸ் கைதாக வாய்ப்பு..?

#BREAKING :- சென்னையில் பதற்றம்.. விரைவில் ஓபிஎஸ் கைதாக வாய்ப்பு..?

Update: 2022-07-11 13:38 GMT

சென்னை வானகரத்தில் இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு, பொருளாளர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களும் பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓ.பன்னீர்செல்வம் ஒட்டு மொத்தமாக கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. கதவை உடைத்து கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் 144 தடை உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து,  144 தடை உத்தரவு அமலில் உள்ள பகுதியில் தர்ணா போராட்டம் நடத்தியது சட்ட விரோதம். இதனால்,  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Similar News