தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதன் கேள்வி - பதில் நேரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது;

“அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வை சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.

ஆன்லைன் கலந்தாய்வில் குளறுபடி நடைபெற்றதால் நேரடி கலந்தாய்வு நடத்த பரிசீலிக்கப்படும். ஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் நிலவும் குளறுபடிகளை களைந்து, வரும் ஆண்டுகளில் கலந்தாய்வை நல்ல முறையில் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

எனவே, பொறியியல் கலந்தாய்வில் விரைவில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.