தெருவில் விரட்டி விரட்டி கடிக்கும் வெறிநாய்கள்.. பலர் காயம்.. அச்சத்தில் மக்கள் !!
தெருவில் விரட்டி விரட்டி கடிக்கும் வெறிநாய்கள்.. பலர் காயம்.. அச்சத்தில் மக்கள் !!
வெறிநாய் கடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோகம் நிகழ்ந்துள்ளது.
நகர், கிராமப்புற பகுதிகளில் தெருநாய்க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அந்த தெருவுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள், குழந்தைகள் சென்றால் துரத்தி துரத்தி கடிக்கும் நிகழ்வுந்டந்தேரி வருகிறது. சில நேரங்களில் சரியானதாக இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் பெரும் ஆபத்தாக முடிந்துவிடுகிறது.
அந்த வகையில், சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த வீரக்கல் புதூர் மற்றும் பி.என்.பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலையில் சென்றவர்களை வெறிநாய் விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடுமையான காயமடைந்துள்ளனர். குறிப்பாக இதில் மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 3 சிறுவர்கள் கடுமையான காயங்களுடன் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெறிநாய் தொல்லையால் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களையும், சிறார்களையும் வெறிபிடித்த நாயிடமிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
newstm.in