குறைந்த வாடகைக்கு விடுதி.. குளியலறையில் கேமரா.. ரசித்த உரிமையாளர் கைது..!
குறைந்த வாடகைக்கு விடுதி.. குளியலறையில் கேமரா.. ரசித்த உரிமையாளர் கைது..!
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கர்னல் கஞ்ச் பகுதியில் விடுதி ஒன்றை நடத்தி வருபவர் ஆஷிஷ் கரே. டாக்டர் ஒருவரின் மகனான அவர் அந்த பகுதியில் தனது விடுதியை குறைந்த வாடகைக்கு விட்டுள்ளார். இதில், இளம் பெண்கள் பலர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், குளியலறைக்கு இளம்பெண் ஒருவர் குளிக்க சென்றுள்ளார். ஆனால், ஷவரில் இருந்து தண்ணீர் சரியாக வரவில்லை.
இதனால் ஷவரின் மேல் மூடியை கழற்றியுள்ளார். அதில் கேமரா ஒன்றும், அதனுடன் இணைக்கப்பட்ட ஒயரும் இருந்துள்ளது. அதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுபற்றி அந்த இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் விடுதிக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்துள்ளனர்.
இதில், அந்த புகார் சரியென தெரிய வந்தது. கரே கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கேமரா, 9 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அவரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
குளியலறையில் பதித்த கேமராக்களின் வழியாக வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றை கணினி லேப்பில் இருந்தபடி கரே பார்த்து ரசித்து வந்துள்ளார். அந்த வீடியோக்களை ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்துள்ளார்.
இந்த வீடியோக்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி இளம் பெண்களை மிரட்டியிருக்கிறார். அந்த வீடியோக்களை விற்றும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.