பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாத அரசு பேருந்துகளுக்கு செக்..!!

பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாத அரசு பேருந்துகளுக்கு செக்..!!

Update: 2022-06-25 05:45 GMT

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் நகர் மற்றும் புறநகர்ப் பேருந்து சேவைகளையும் இயக்குகிறது. மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் முழுவதும் நகர பேருந்துகளாகவும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் முழுவதும் புறநகர் சேவைகளையும் கொண்டுள்ளது. மற்ற போக்குவரத்துக் கழகங்கள் இருசேவைகளிலும் கணிசமான பேருந்துகளை இயக்குகின்றன.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் பேருந்துகள் முறையாக பேருந்து நிறுத்தத்தில் நிர்த்தப்படுவதில்லை என்றும் இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர் என்றும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உரிய பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ, சாலையின் நடுவிலோ அரசுப் பேருந்துகளை ஓட்டுநர்கள் நிறுத்தக் கூடாது.

மேலும், பேருந்து நிறுத்தத்தை விட்டு தள்ளி பேருந்தை நிறுத்துவதால், பயணிகள் பேருந்து ஓடிவந்து பேருந்தில் சிரமப்படுகிறார்கள் எனவும், அப்படி ஓடிவந்து பேருந்தில் ஏறும்போது பயணிகள் கீழே விழுந்து காயங்கள் ஏற்படும் சூழ்நிலையும், சில் நேரங்களில் மரணங்கள் தொடர்பான விபத்துகளும் ஏற்பட ஏதுவாகிறது.

எனவே, அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் மட்டும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News